ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மீது இன்று காலை தாக்குதல்(பட இணைப்பு)

2084FJJ[1]

thenakoon[1] than%203[1]

23.01.2009இன்று காலை மற்றுமொரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் இன்று தாக்கப்பட்டதாக அப்பத்திரிகையின் அலுவலக உத்தியோகத்தர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை அவரும் அவரது மனைவியும் பயணித்துக் கொண்டிருந்த வேளை, இனந்தெரியாத சிலர் இவர்களது காரைத் தாக்கியுள்ளனர். காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருந்த போதிலும் உபாலி தென்னக்கோன் உயிர் ஆபத்து ஏதுமின்றி தப்பித்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.