பெண்புலியாக...

பெற்றோரை துறந்து
உற்றாரை மறந்து
சுற்றத்தாரை வெறுத்து
மற்றோருக்காக வாழ நினைத்து
வீட்டுப்பெயர் இழந்து
நாட்டுப் பெயரோடு
காட்டில் வாழும்
வேட்டைப்புலியே
உன் இனத்திற்காக
மண்மீது பற்றுக்கொண்டு
கண்ணிமைக்காது இரவுபகல்
குண்டோடு வாழும் நீ
கால் இழந்த போதிலும்
பொல் ஊன்றி நடந்து
மீண்டும் களமாடிய
அண்ணாவே, எப்போதுநீ
சொந்த தங்கை எனை
சந்திப்பாய் என நினைத்து
அந்நாளுக்காக காத்திருப்பேன்
வந்தெனை அழைத்துப்போ
உன்னிருப்பிடம் சென்று
என் தோளில் துவக்கேந்தி
பெண்புலியாக நானும்
உன்னோடு துணையாக

நிலா