மிதுன ராசிக்காரர்களின்

மிதுன ராசிக்காரர்களின் கைகள் சிறியதாக இருக்கும். சில பெண்களின் கைகள் ஆண்களின் கைகளைப் போன்று இருக்கும். இவர்களது கை விரல்கள் நீண்டு இருக்கும இவர்களது முகத்தில் மச்சம் இருக்கும்மிதுன ராசிக்காரர்கள் மிகப்பெரிய பதவிகள் எதையும் வகிக்கும் யோகம் இல்லை. இவர்கள் ஊழியராகவே இருப்பார். இவர்கள் ஏதாவது தொழிலை செய்தாலும் கூட்டாளியின் பெயரில் துவங்குவது நல்லது. குடும்பத்தினாரின் பெயரில் துவக்குவதும் நல்லதல்லமிதுன ராசிக்காரர்களின் பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்காது, பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை இவர்களது பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்மிதுன ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற குண நலன்கள் உண்டு. விவேகமானவர், சமயம் அறிந்து நடந்து கொள்பவர், மிகுந்த அனுபவசாலியாகவும் இருப்பார். மன அமைதிக்காக கோயில், தர்ம காரியங்கள் செய்வார். ஒவ்வொரு நாளையும் கடவுள் கொடுத்த பாக்கியமாக கருதி வாழ்பவர். தன்னம்பிக்கை கொண்டவர், மனம் மற்றும் ஆத்ம திருப்திக்காக வாழ்பவர், அன்பிற்கு கட்டுப்படுவராக மிதுன ராசிக்காரர்கள் இருப்பார்கள். தான் அன்பு செலுத்தியவருக்காக எதையும் செய்பவர். மற்றவர்களுடன் ஏற்படும் விரோதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். வெட்டு ஒன்ணு துண்டு ரெண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மற்றவர்களிடம் பேசுவார். எதையும் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவார். பிடித்தவர்களின் ஆலோசனையை மட்டுமே எடுத்துக் கொள்வார்வேலை செய்தே இவர்களது வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றிக் கொள்ள முடியும். தனது வாய் சாமர்த்தியத்தால் வேலை செய்யும் இடத்தில் பெரிய பதவியை பெற முடியும். இவர்கள் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், மொழியாளர், ஆலோசகராக இருக்கும் யோகம் உண்டு. வீடோ நிலமோ கிடைக்கும் யோகம் உண்டு.

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுடன் நண்பர்களாக இருப்பது நல்ல. இவர்களை கூட்டாளிகளாகவும் சேர்த்துக் கொள்ளலாம். கடக ராசிக்காரர்களுடன் சுமூகமாக இருக்கலாம். மிதுன ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்களுக்கு எதிரியாக இருப்பர்.பாடல், சினிமா, புத்தகம் படிப்பதில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பிடித்தமான பொருட்களை பாதுகாக்க அதிக நேரம் செலவிடுவர். எல்லோரும் தன்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்மிதுன ராசிக்காரர்கள் யாராவது ஒருவர் மீது அளவுக்கதிகமான அன்பு காட்டுவார்கள். இதனால் சிலருக்கு காதல் தோல்வியும், திருமண பந்தம் முறிவதும் நிகழ வாய்ப்புண்டு. மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போனால்தான் இவர்களது வாழ்க்கை சிறக்கும்

பயந்த சுபாவம் கொண்டவர்கள். யாரிடமும் தனது குறையை சொல்லிவிடுவர். இதனை பலர் பயன்படுத்திக் கொள்வர். யதார்த்தத்தை புரிந்து கொள்ளவே மாட்டார்கள். தன்னம்பிக்கையற்ற, சஞ்சலம் மிக்கவர்களான இவர்கள், எந்த காரியத்தையும் உடனடியாக முடித்துவிட வேண்டும். ஏதாவது இழுபறி ஏற்படின் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள். பலரை காதலிக்கும் ஆசை உள்ளவர். இதனால் வாழ்க்கை பாதிக்கும் என்ற பயம் அற்றவர். பல காதல் தோல்விகளை எதிர்கொள்பவர். உபாயம் கஷ்டங்களில் இருந்து விடுபட செவ்வாய் அல்ல சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். காயத்ரி மந்திரம் ஜபிக்கலாம்.

இவர்களுக்கு மரகத கல் அதிர்ஷ்டமாகும். இதனை வெள்ளி மோதிரத்தில் பதித்து புதன்கிழமையன்று அணிய வேண்டும். அதிக கஷ்டம் ஏற்படின் செவ்வாய்கிழமை விரதம் இருக்கலாம்.

மற்றவர்களை எளிதாக கவரக்கூடியவர்கள். நிலைத்தன்மை கொண்டவர்கள். தாங்கள் கொண்ட கொள்கையை எந்நேரத்திலும் விடமாட்டார்கள். புத்திக்கூர்மை மிக்கவர்கள். விரோதிகளைக் கண்டாலும் புன்னகைக்கும் பரந்த மனம் கொண்டவர். எல்லோரையும் அனுசரித்துப் போவது இவரது விசேஷ குணமாகும். இவர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவர். தயாள குணம், கருணைவாதி, மனித நேயம் கொண்டவர். எல்லோரையும் சமமாக மதிப்பார். சகித்துக் கொள்ளுவர். துரோகிகளையும், பொய்யர்களையும் மன்னிக்க மாட்டார். உணவு உண்ணுவதில் அதிக ஆர்வம் காட்டுவார். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். விரோதிகளையும் திறன் அறிந்து பாராட்டுவார். ஒரு வார்த்தை பேச வேண்டுமென்றாலும் யோசித்துத்தான் பேசுவார். எந்த கஷ்டத்தையும் தனியாக நின்று சமாளிப்பார்மிதுன ராசிக்காரர்கள் இயந்திரம் தொடர்பான கல்வியில் ஆர்வம் காட்டுவர். ஏனெனில் இயந்திரத் தொடர்பான கல்வியில் இவர்கள் அதிக புகழ் அடைவர்மிதுன ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமானவர்களாகவும், தடிமானாகவும் காணப்படுவர். மன உளைச்சல் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனாலேயே உடல்நிலை பாதிக்கப்படும். ஏதேனும் பெரிய வியாதி வருமோ என்ற பயம் இருக்கும். நெஞ்சு வலி, இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு உணவை குறைத்துக் கொள்வது நல்லது. துளசி, மிளகு போன்ற மருத்துவ குணம் கொண்டவைகளை பயன்படுத்துதல் நல்லது. கீழே விழுந்து அடி படும் வாய்ப்புண்டு

இவர்கள் உறவினர்களை விட நண்பர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் உறவினர்கள் இவர்களை எதிரிகளாக எண்ணுவர். வீடோ அல்லது நிலங்களோ கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தினர் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு கொள்ளுப்பேரனை பார்க்கும் யோகமும் உண்டு.

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பார்வை இருப்பதால் இவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்ட தினமாகும். வியாழக்கிழமையும் உகந்ததே. திங்கட்கிழமை மட்டும் அசுபம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 5 அதிர்ஷ்ட எண்ணாகும். 5ன் கூட்டு எண்களும் அதிர்ஷ்டமாகும்.