றிச்கேக்

றிச்கேக் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
80 தொடக்கம் 100 வரையிலான துண்டுகளைப் பெறக்கூடிய அளவு: ரவை 225 கிராம் , மாஜரின் 225 கிராம், சொவ்ட் சுகர் 750 கிராம், பதப்படுத்திய இஞ்சி (Ginger preserve) 225 கிராம், பதப்படுத்தப்டுபட்ட செறி 100 கிராம், பதப்படுத்தப்பட்ட பூசணி ((Pumpkin) 225 கிராம், Chow chow 225 கிராம்,பதப்படுத்தப்பட்டிட தோடம்பழம், Candied peel 100 கிராம், Turrent 225 கிராம் , Raisins 225 கிராம் , கஜூ 225 கிராம் , சுல்தானா பிளம்ஸ் 225 கிராம் , ஸ்ரோபரி ஜாம் 1 , வனிலா 3/4 அவுன்ஸ் ,றோஸ் எசென்ஸ் 1/2 அவுன்ஸ், ஆமன்ட் ((ALMOND) சென்ஸ் 1/2 அவுன்ஸ், Mind spice powder- 2 தேக்கரண்டி, பிறன்டி 1 வைன் கிளாஸ் அளவு, தேன் 1 வைன் கிளாஸ் அளவு, தேன் 1 கப் , முட்டை மஞ்சள் கரு 15 , முட்டை வெள்ளைக் கரு 5, பேக்கிங் பவுடர் தேவையான அளவு, வாசனைப் பொருட்கள் தேவையான அளவு.
செய்முறை
முதலில் அனைத்துப் பழங்களையும் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பெரிய பாத்திரத்தில் இட வேண்டும். அதற்குள் ஜாம் ,றோஸ் எசென்ஸ், வனிலா, ஆமன்ட் எசென்ஸ், தேன், பிரன்டி என்பவற்றை சேர்த்து, நன்றாக எல்லாவற்றையும் கலந்து மூடி எமது தேவைக்கேற்ப 3 அல்லது 4 நாட்கள் ஊற வைக்க வேண்டும். (சிலர் 15 நாட்கள் வரையில் ஊற வைக்கின்றனர். விருப்பமானால் சிறிதளவு உப்பும் சேர்க்கலாம்). ஊற வைக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் இக் கலவையை ஈரம் இல்லாத கரண்டியால் கலந்து விட வேண்டும்.
பின்னர் கேக் தயாரிக்கும் பொழுது முதல் நாள் ரவையை வறுத்தெடுத்து பட்டருடன் கலந்து வைக்க வேண்டும். மறுநாள் 15 முட்டை மஞ்சள் கருவையும் 5 முட்டையின் வெள்ளைக்கருவையும் கலந்து வைக்கப்பட்ட ரவை,மாஜரினுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இத்துடன் முன்னரே வாசனைத் திரவியங்களையும் கலந்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கலவையையும் இப்போது சேர்த்துக் கலக்கவேண்டும். அனைத்தும் கலக்கப்பட்டதும் நாம் தயாரித்து வைத்த பழக்கலவையை அதனுள் சேர்த்துக் கலக்கவும். நன்றாக கலவை சேர்ந்ததும் தட்டில் ஊற்றி பேக் செய்ய அனுப்ப வேண்டும். பேக் செய்யப்பட்ட கேக் நன்றாக ஆறியதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு உலுத்திக் கொள்ள வேண்டும்.(விரும்பின் சிறிதளவு நெக்ரோ சோடா சேர்த்து குழைத்துக் கொள்ளலாம்). உலுத்தப்பட்ட கேக்கை குழைத்து மீண்டும் தட்டில் போட்டு உருட்டி தட்டி சிறிய அளவுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் கேக் சுற்றிவைக்கும் ஒயில் பேப்பரில் துண்டுகளை சுற்றி பின்னர் மேலே சுற்றும் பேப்பரரையும் சுற்றி அழகாக வைத்துப் பரிமாறலாம்.
இதற்கு இப்போது சிலர் ஆமன்ட் ஐசிங்கையும் போட்டுக் கொள்கின்றனர். அதற்கு ஆமன்ட் எசென்ஸ் 1 தேக்கரண்டி, றோஸ் எசென்ஸ் 1 தேக்கரண்டி, முட்டை 1, கஜூ 225 கிராம், ஐசிங் சுகர் 500 கிராம், பிரண்டி 4 தேக்கரண்டி, வனிலா 3 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொண்ட பின்னர் ஒரு தட்டில் இட்டு உருட்டி தட்டையாக்கிய பின்னர் ஒவ்வொரு றிச் கேக் துண்டையும் அதற்கு மேல் வைத்து வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒயில் பேப்பரில் சுற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்யப்பட்ட றிச் கேக்கை அது சுற்றப்பயன்படுத்தப்படும் பேப்பரில் சுற்றி பாவனைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இந்த ஐசிங் கேக்கை தண்ணீர் படாமல் வைத்திருந்தால் 6 மாதங்களுக்கு மேல் வைத்துப் பாவிக்க முடியும். சிலர் ஒரு வருடங்கள் வரையிலும் வைத்து பாவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் செய்யும் பொருட்கள் மிகவும் சரியானதாகவும் அளவுகள் பிழைக்காமல் செய்யப்படுமானால் அதைப்பல காலங்கள் வைத்துக் கொள்ளலாம். எனவே ஒவ்வொருவரின் செய்முறைக்கேற்பவே அதன் காலமும் நீடிக்கப்படுகின்றது. என்ன எமக்கு கிறிஸ்மஸ் மற்றும் வருடப்பிறப்பிற்கு மட்டும் இருந்தால் போதுமென்று சிலர் எண்ணலாம். முயன்று பாருங்கள் . எனவே கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள் றிச்கேக்கையும் தயாரித்து வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு பரிமாறி உண்டு மகிழலாம்.நன்றி.அரசி