தமிழ்கைதிகள் நிர்வாணமாக்கி அனுராதபுரசிறையில் கொடுமை

20.01.2009மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு அனுராதபுரச்சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்கைதிகள் தாம் சிறைச்சாலைகாடையர்களாலும்,சிறைச்சாலை அதிகாரிகளாலும் கடந்தசனிக்கிழமையும் நிர்வாணமாக்கி தாக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயர் செய்யப்பட்ட போது கைதிகள் கூறினர். மேலும் தமக்கு வழங்கப்பட்ட உடைமைகள் மற்றும் அடையாள அட்டை பறித்து எறியப்பட்டதாகவும் தெரிவீத்தனர்.தாம் மற்றையகைதிகளின் உடைகளையே வாங்கி அணிந்ததாக தெரிவீத்தனர்.

இச்சம்பவத்தின் பின்னனியில் அனுராத்புரச்சிறைச்சாலையின் காவலாளியாக் கடமை புரிந்து வரும் பாலேந்திரா,சுமங்ககங்கீத் மற்றும் அனுராத்புரச்சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர் எனதெரிவீத்தனர்.விசாரனை மேற்கொண்ட மன்னார் நீதிபதி ஜீட்சன் இதற்கு சாட்சி அளிக்குமாறு தெரிவீத்தார்…. அப்போது 7 கைதிகள் சாட்சியம் அளித்தனர்.

மாசி 2 திகதி அன்று குற்றவாளிகளை நீதிமன்றத்தி ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார் நீதிவான் தெரிவீத்தார்.20.01.009