கன்னி ராசி

கன்னி ராசி நேயர்களுடைய கைகளில் உள்ள விரல்கள் குட்டையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகளும் மற்றவர்களைவிட அதிகமா இருக்கும். இவர்களுடைய முதுகில், கழுத்தில் தோள்பட்டையில் மச்சம் இருக்கும்.

இவர்கள் சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். சவால்களையும், போராட்டங்களையும் ரசித்து எதிர்கொள்ளும் மனப்போக்கு கொண்டவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவதால் தொழிலில் இவர்கள் விருத்தி அடைவார்கள். தெளிவாக முடிவை எடுக்கவல்லவர்கள். கன்னி ராசிக்காரர் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர். பணத்தினுடை மகத்துவத்தை நன்றாக புரிந்து கொள்பவர். பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவர். நினைத்ததை ஆலோசிப்பர். எல்லா பொருட்களையும் தானே இஷ்டப்பட்டு வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

இவர்களுடைய குணம் மற்றவர்களை வருந்தச் செய்யும். இவர்கள சின்ன சின்ன விஷயங்களைக் கூட பெரியதாக எடுத்துக் கொள்வார்கள். அன்பை வெளிப்படுத்தாதவர்கள். முன்கோபக்காரர்கள். பழைய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஒரு காரியத்தை எடுத்தால் அதை சீராக முடிப்பவர்கள். இவர்கள் உருவாக்க மனப்பாங்கு கொண்டவர்கள். உடல் வடிவத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர். இவர்கள் சராசரியாக வாழ்பவர்கள். அன்பு ஏற்படத் தொடங்கும் வேளையில் முன்னேற்றத்துக்காக மேலும் மேலும் முயற்சி எடுப்பவர். உடல் நலத்தை நல்லபடியாக கவனிப்பவர்கள். அறிவை வளர்த்துக் கொள்ள ஆர்வமுடையவர்கள்.

கன்னி ராசி உள்ளவர்கள் எந்தத் துறையிலும் வெற்றி பெறுவார்கள். இதனை அவர்களுடைய ஜாதகத்தைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம். இந்த ராசி உள்ளவர்கள் ஆசியராகவும், செய்தியாளர்களாகவும் நன்றாக பணிபுரிவார்கள். பணத்துடைய அருமையும், முக்கியத்துவத்தையும் புரிந்தவர்கள். சிக்கனமாக இருக்க ஆசைப்படுவார்கள். எந்தவொரு வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் சாமார்த்தியமாக முடிப்பார்கள்.

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கன்னி ராசி உள்ளவர்களுக்கு விருச்சிகம், ரிசபமும், மகர ராசி உள்ளவர்கள் பொருந்துவார்கள். மீன ராசியை கவருபவர்கள். ஆனாலும் இரண்டு கன்னி ராசிக்காரர்கள் சேர்ந்தால் விரோதம் இருக்கும். மிதுனம், துலாம், சிம்ம ராசி உள்ளவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். கன்னி ராசி உள்ளவர்கள் கும்ப ராசி, மேஷம் ராசி உள்ளவர்களை பிடிக்காது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்ற ராசிகளிடையே சராசரியாக பழகுவார்கள்

சங்கீதத்திலும், புகைப்படத் துறையிலும் சிறந்தவர்கள். படிப்பில் ஆர்வம் அதிகம். இவர்கள் விழிப்புணர்வோடும், கவனிப்போடும் இருப்பதனால் எழுத்தாளர்களாகவும் ஆவார்கள். கன்னி ராசி உடையவர்கள் உதவி செய்யும் குணமுடையவர். வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், செய்தி வாசிப்பவர்களாகவும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் கஷ்ட நேரத்தில் உதவி செய்து மகிழ்ச்சியடைவர். நூலகப் பணியிலும், யோகத்திலும் ஈடுபடுவர். வேலை செய்யும் உணர்வுடையவர்கள்.

கன்னி ராசி உள்ளவர்கள் மகர ராசியும், விருச்சிக ராசி உள்ள மணமகனும், மணமகளோடு சம்பந்தம் அதிக சுகம் ஆகும். இவர்களுடைய வாரிசு அறிவாளியாக இருக்கும். கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு பேச்சில் அவர்களுடைய உயிர் தோழனும் குழந்தையும் சம்பந்தப்பட்டிருப்பார்கள். கன்னி ராசி உடையவர்களுடையவர்களுக்கு அன்பு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கையில் பெண் உதவி சம்பந்தப்பட்டிருக்கும்.

கன்னி ராசி உடையவர்கள் அதிகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள். மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்காதவர்கள். அதனால் நஷ்டத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை கேலி செய்வதில் சந்தோஷமடைவார்கள். அதனால் உறவு உடைந்து விடும். ஒரு விஷயத்தை அதிகமாக பேசுவதால் மற்றவர்கள் அதிகமாக சிரிப்பார்கள். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவசரப்படுவார்கள். ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். ஓர் விஷயத்தை ஆர்வம் காட்டினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இவர்கள் ராமர், கிருஷ்ணர். கணபதி இஷ்ட தெய்வங்களின் பெயரைச் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனால் கஷ்டங்கள் தீரும். பணத்திற்காக லட்சுமியை பிரார்த்தனை செய்ய வேண்டும். புதன்கிழமை விரதம் இருந்தால் லாபம் கிடைக்கும். இவர்கள் ஓம் பிராம் பிரீம் பிரோம் சகா என்ற மத்திரத்தை 9,000 முறை உச்சரிக்க வேண்டும். கன்னி ராசி உள்ளவர்களுக்கு பச்சை நிற உடை, கற்பூரம், பூ, பழம், பச்சைப் பொருட்கள், புதன்கிழமை தியானம் செய்தால் பலன் கிடைக்கும்.இவர்கள் படிப்பு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள். அதனால் படிப்பில் முன்னேற்றத்தை பெறுவர். கஷ்டப்பட்டு கடின உழைப்பில் வெற்றி பெறுபவர். புகைப்படத்துறை, வீடியோ, சங்கீதம் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் உடையவராக இருந்தால் வெற்றி பெறலாம்.                  கன்னி ராசி இருப்பவர்கள் நேரம் தவறி சாபபிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் அவதிபடுவார்கள். இந்த ராசி இருப்பவர்கள் பித்தம், இருமல், தும்மல், தோல் வியாதி, காது வலி, தொண்டை வலி, வாயு, அம்மை, மூட்டு வலி, முதுகு வலி, படர்தாமரை இந்த அவதிகளையெல்லாம்படுவார்கள். இந்த ராசி உள்ள நேயர்களுக்கு முடி கருப்பாக இருக்கும். சிலருக்கு முடி அழகாக இருப்பது உண்டு. இவர்களுக்கு ஏற்படும் தலைவலியால் கண் பார்வை குறையும் வாய்ப்புள்ளது. அதிகமாக யோசித்தால் மூளை பாதிப்பு ஏற்படும். ஞாபகசக்தி, ஆஸ்த்துமா, ரத்த கசிவு, வயிற்று வலி, இருமல் எல்லாம் வர நேரிடலாம். மனதுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் பயற்சி, நடை பயிற்சி செய்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். உடல் நலத்தை நன்றாக கவனிக்க வேண்டும். இதில்தான் நன்மை இருக்கிறது. பழச்சாறு, காய்கறி கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மாமிசம் இவற்றில் கவனிப்பாக இருக்க வேண்டும். மோர், தயிர் உடல் வளர்ச்சிக்கு நல்லது. வைட்டமின் டி, கால்சியம் இருக்கும் பொருட்களை உணவில் சேத்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமாகவும், விவேகமாக வாழ்ந்தால் உடல் நன்றாக இருக்கும்

இவர்கள் கூட்டு குடும்பத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும் வெளியில்தான் மதிப்பு இருக்கும். குடும்பம் பிரிவதை ஏற்க மாட்டார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள். அக்கம், பக்கம் உள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள். குடும்பத்திற்காக அக்கறை காட்டுபவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள். ஆனாலும் இவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்காது. இருந்தாலும் தன் கடமையை செய்பவர்கள் இவர். அண்ணன், தம்பி, நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் மீது பாசம் காட்டுவார்கள். இவர்களுக்கு வீட்டிலும், வெளியிலும் உதவி கிடைக்கும்

கன்னி ராசி உள்ளவர்களுக்கு புதன்கிழமை அதிர்ஷ்டமான நாள். இந்த நாளில் அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்களுக்கு சனிக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் சில சமயம் நல்ல நாட்களாக இருக்கும். ஆனால் செவ்வாய்க்கிழமை இவர்களுக்கு அதிர்ஷ்ட நாள் இல்லை.

கன்னி ராசி உள்ளவர்களுக்கு 5 அதிர்ஷ்டமான எண்ணாகும். 5, 14, 23, 32, 41, 50, 59, 68 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். இதைத் தவிர 1, 4, 6, 7 ஆகியவை அதிர்ஷ்ட எண்களாகும். 2, 3, 8, 9 ஆகியவை அதிர்ஷ்டம் இல்லாத எண்களாகும். அதிர்ஷ்டமான எண்களை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு நல்ல காரியத்தை தொடங்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாத எண்களை உபயோகிக்கக் கூடாது