சிறுசெய்திகள்

தமிழ் நாட்டில்மற்றுமொரு இளைஞர் தன்னைதானே தீமூட்டிஈழத்தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவர் குமார் எனவும் மதுரையை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது. தமிழ்நாட்டில் தற்பொழது என்றும் இல்லாதவாறு மாபெரும் எழுச்சி நிலவுவது குறிப்பிடத்தக்கது

விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பிரதான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதன் நியமனம்:
விடுதலைப்புலிகளின் அமைப்பின் தலைமை பீடம், தமது சர்வதேச உறவுகளுக்கான பிரதான பொறுப்பாளராக செல்வராசா பத்மநாதன் என்பரை நியமித்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பு புதிதாக சர்வதேச உறவுகளுக்கான திணைக்களம் என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளது.
பத்மநாதன் விடுதலைப்புலிகளின் சமாதான முனைப்புகள் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களை கையாள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டில் இருந்தவாறு தமது பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர்
பா. நடேசன் இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளார்