சிறுசெய்திகள்

ஈழத்தமிழருக்காக ஒலிக்கும் இந்திய மாணவர்களின் குரல்களை முடக்க தமிழக அரசு கல்லூரிகளுக்கும் மாணவர் விடுதிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதாக மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதுடன் திங்கட்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் மீண்டும் வழமை போல் இடம்பெறும் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது

அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சுதந்திரபுரம் மீது இன்று இலங்கைப் படையினர் நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்