காதலர் தினத்தை மறக்க முடியுமா

எந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத எதிர்பார்த்துப் பார்த்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.
வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணியை மிச்சம் பிடிப்பது, வீட்டில் உள்ள பொருட்களை, பணத்தை திருடுவது நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரிடமும் வெட்கப்படாமல் கடன் வாங்குவது என்று பரப்பரப்பாக சுறுசுறுப்பாக ஒடித்திரிவார்கள். எங்கேடா.. பணம் கிடைக்கும்.. யாருடைய தலையினை தடவுவது என்ற திண்டாடங்களும் கூடவே கொடி பிடிக்கும்.
வீதிகளில் தன் பெயரையும் காதலிக்கும் ஆளோட பெயரையும் அடிகிறவங்க ஒருபக்கம்.அடுத்து, இத்தினத்தில் (காதலன் காதலியை) சந்திக்கக்கூடிய இடங்களை பூந்தோட்டம், கடற்கரை, விடுதிகள், காதலுக்கு ஆதரவான நண்பர்கள் உறவினர்கள் வீடுகள், நடுத்தெரு, சந்து பொந்து கல்விகற்கிற வகுப்பு என்று பட்டியல்கள் நீளமாக போகும். கண்டிப்பாய் சந்திப்பதாக உறுதி மொழியும் எடுத்துக்கொள்வார்கள். இதற்காக பாடசாலை பகுதி நேர வகுப்பு இன்னும் சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷங்கள் என்று அனைத்திற்கும் கட் அடிப்பார்கள். வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி சமாளித்து வீட்டை விட்டு வெளியேறுவது, காதலை எதிர்க்கும் நண்பர்களிடம் இருந்து என்னென்ன கதைகள் பொய்கள் சொல்லி அன்றைய தினம் அவர்களிடமிருந்து தனிமை படுவது என்றெல்லாம் திட்டம் தீட்டுவார்கள்.
வேறு எந்த காரியத்திற்கு இப்படி வேகமாய் விவேகமாய் செயல்பட மாட்டார்கள் இதுவெல்லாம் எதற்கு வாழ்க்கையே திண்டாட்டத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் காதலிக்கும் போது காதல் சுவையாகத்தான் இருக்கும்.அதை விட வேற நினைவே வராது.எதிர்கிறவங்களை வெறுப்பா பார்ப்பாங்க ஆனா அந்த காதல் பிரிந்தால் பின்பு யோசீத்தால் எல்லாம் சூனியமாக தெரியும்.இது ஒரு வித ஓமோன்களின் வேலை தானுங்க. தப்பா இருந்த மன்னீத்துக்குங்க… கஜன்