வன்னிப் பேரவலத்தை நிறுத்தக் கோரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று ஆரம்பம்

lib2[1] JaffnaUniversity[1] வன்னிப் பெருநிலப்பரப்பரப்பில் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் மனிதப் பேரவலத்தை நிறுத்தி   சமாதான நடவடிக்கைகளில் இரு தரப்பினரையும் ஈடுபடக்கோரி    யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால்  இன்று மேற்கொள்ளப்படும் வகுப்பு பகிஸ்கரிப்பு மற்றும் நிர்வாக முடக்கல் காரணமாக பல்கலைக்கழகத்தின் சுமுகநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சுமார் 95 வீதமான மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்கவில்லை. பல்கலைக்கழகத்திற்கு சென்ற மாணவர்களும் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடாமல் உடனுமே வீடு திரும்பினர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் போராட்டத்தில் குதித்;துள்ளனர். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் முற்றாக மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் எவரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே பல்கலைக்கத்திற்கு அண்மித்த வீதிகளில் படையினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வழமையான பலவலான விதிச்சோதனைகளிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ வரும் மாணவர்களையோ அல்லது ஊழியர்களையோ சோதனையில் ஈடுபடும் நடவடிக்கையில் அவர்கள்  ஈடுபடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த வகுப்புப் பகிஸ்கரிப்பு மற்றும் நிர்வாக முடக்கல் போராட்டம் காலவரையற்றுத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்செய்தி