ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

Mahinda_kodumpavi_kojampothur_1_1[1] Mahinda_kodumpavi_kojampothur_2_0[1] Mahinda_kodumpavi_kojampothur_3_1[1] ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: நாமக்கல்லில் பரபரப்பு
இலங்கையில் சிங்கள ராணுவத்தினர் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் எராளமான தமிழர்கள் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.என்பது அனைவரும் அறிந்த விடயம். 
இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதை கண்டித்து நாமக்கல் மோகனுர் சாலையில் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் இன்று காலை மாணவர்கள் மற்றும் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியே வந்தார்கள். பின்னர் அவர்கள் இலங்கை ராணுவத்தை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
`தாக்காதே தாக்காதே, தமிழர்கள் மீது தாக்காதே `மத்திய அரசே, மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடு' போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன் பிறகு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று அறியக்கூடியதாக உள்ளது

போட்டோ.ஈழவன்