சென்னையில் உள்ள இலங்கை மக்கள் வங்கி அடித்து நொருக்கல்.

peopels-bank-protest_0408806_56564_435[1] சென்னை வேப்பேரியில் பூந்தமல்லி சாலையில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியில் இன்று மாலை 4மணிஅளவில் 50க்கும் மேற்பட்டவர்கள் காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரை மீறி உருட்டுக்கட்டைகளுடன் உள்ளே நுழைந்தனர்.
வங்கியின் ஜன்னல்கள் அடித்து நொருக்கினர். முக்கிய ஆவணங்கள் அள்ளி வீசப்பட்டனர்.
இந்த தீடீர் தாக்குதலால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள். வணிகவளாகத்தின் மூன்று அடுக்கு மாடியில் இருந்த கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன. வங்கி அதிகாரிகளின் கார்களும் அடித்து நொருக்கப்பட்டன.