யாழ்ப்பாணத்தில்வாகனகொள்ளையில் ஈடுபட்ட குழு கைது

யாழ்ப்பாணத்தில் வாகன கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கும்பலில் வாகன பழுதுபார்க்கும் நிலையத்தின் ஊழியர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
களவாடப்பட்ட வாகனங்களின் உதிரிப் பாகங்களை மாற்றியமைத்து பல்வேறு மோசடிகளில் குறித்த குழு ஈடுபட்டு வந்தமை தெரியவருகிறது.

தமிழ்செய்தி