நிலத்தை நம்பி அல்ல பலத்தை நம்பி

 LKA_E[1]தமிழீழம் கிடைப்பதற்கு தமிழீழ விடுதலைபுலிகள் மட்டுமல்ல தமிழ்மக்களும்,புலம்பெயர்ந்த தமிழ்மக்களும் பெரும் பங்கு ஆற்றுகின்றனர்.என்பது மறக்க முடிய உண்மை ஒன்று ஆகும்.புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும் தொகையான பணத்தினை வருடாந்தம் ஈழத்துக்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.அது மட்டுமல்லாமல் நாட்டுக்கு நாடு போராட்டங்களையும்.விழிப்புணர்வுகளையும்

இலங்கை அரசாங்கத்துக்கு

எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும்.நடத்தி தமது கடும் எதிர்ப்பையும் வெளிக்காட்டு காட்டுகின்றனர்.இதனை தினம் தினம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.அண்மையில் மாவீரர் தினநிகழ்வுகளில் எமது புலம் பெயர்ந்த மக்கள் காட்டிய ஆர்வம் முன்னைய வருடங்களை விட அதிகம் ஆகும்.பிரன்ஸ் இல் முன்னைய வருடங்களில் ஒரு மண்டபத்திலேயே மக்கள் வந்து இருந்தனர்.ஆனால் இம்முறை இரண்டு மண்டபங்கள் நிரம்பி வழிந்தன.அதே போல் லண்டனிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு கலந்து கொண்டனர் இந்த வருடம் பல்லாயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் முகமாலையை விட்டனர்,கிளிநொச்சியை பளையை கைவிட்டனர் என்று.புலிகள் வலுவிளந்து விட்டனர் என்று இலங்கை ஜானதிபதி கூறினாலும்.தமிழ் மக்களோ கடைசி வரை நம்ப மாட்டார்கள்.ஏன் என்றால் புலிகளின் பலம் தமிழருக்குத்தெரியும்.புலிபதுங்குவது பயத்தில் அல்ல பாய்வதற்கு என்பது தமிழருக்கு தெரியும்.

புலியின் பலம் எலிக்குத் தெரியுமா அது தான் ராஜபக்‌ஷ வின் நிலை.ஆனால் ராஜபக்‌ஷ படைத்தரப்பின் இழப்பை வெளியிடுவதில்லை.அதை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை கூட எச்சரித்து உள்ளார்.அதை மீறி வெளியிட்ட எம் ரீவி நிறுவனத்தைக் கூட அடித்து நொருக்கு உள்ளனர்.மகிந்தவின் ஒட்டுக்குழுவினர்

விடுதலைப்புலிகள் வலுவிளந்து உள்ளனரா……………………..

பார்போம்…யுத்த நிறுத்தத்திற்கு முன்நாம்(விடுதலைபுலிகள்)

ஆனையிறவைக்கைப்பற்ற வில்லையா,அல்லது சாவகச்சேரியைக் கைப்பற்ற வில்லையா,கட்டு நாயக்கா விமான நிலையத்தை சுக்குநூறாக்கவில்லையா,அனுராதபுரத்தாக்குதல் ஞாபகம் வரவில்லையா…………………இவ்வாறு இருந்த நாம்

பாதைபூட்டியபின்அதவது        போர்நீறுத்தம் யுத்தநிலைக்குத் தள்ளப்பட்ட பின் விடுதலைப்புலிகள் என்ன,,உல்லாசப்பயணம் சென்றுவிட்டனர!அல்லது இறந்து விட்டனர!பின் எவ்வாறு வலுஇழந்தார்கள் என்பது உண்மையாகும்.அல்லது புலம் பெயர்ந்தவர்கள் தேசத்தை மறந்தவ்விட்டார்களா!இல்லை எல்லாம் முன்பு போலதான் உள்ளது.போராட்டத்துக்கு என்று சில உத்திகள் உண்டு அவைதான் தற்போது நடப்பது.கிளிநொச்சியையோ அல்லது முல்லைதீவை நம்பியோ தமிழீழ போராட்டம் இல்லை.நிலம் என்பது போராட்டதின் ஒருபகுதியே தவிர அது தான் போரட்டம் அல்ல.நிலத்தை…பிடிப்பதுமுக்கியமல்ல அதை தக்கவைப்பதே முக்கியம் என்பதை விரைவில் மகிந்த அரசு புரியும்………………….அதை புரியும் காலம் வரும் போது மகிந்தவின் பொருளாதரம் பரியவீழ்ச்சியை எதிர் நோக்கி இருக்கும்.