யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 பேர் கைது

r_160pe%20rick%20hindu%20temple[1]திருவானந்தபுரதில்  கடவுச்சீட்டு இல்லாமல் சபரிமலைக்கு வந்த 20 இலங்கைத்த்மிழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சபரிமலை ஜயப்பன் கோயிலுக்கு நடந்து வெள்ளி அன்று இலங்கை சேர்ந்த 28 தமிழர்கள் சுவாமியைக்கும்பிடவந்தனர்.அவர்களில் மூன்று பேர் பெண்கள்.இவர்கள் அனைவரிடமும் சன்னிதான பொலிசார் விசாரனை நடத்தினர்.இதில் இரண்டு பெண்கள் உட்பட இருபது பேரிடம் கடவுச்சீட்டு உட்பட எந்த ஆவணங்களும் இல்லை.இதை அடுத்து அவர்களை சன்னிதானம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர்.அப்போது அவர்கள் தாங்கள் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து சென்னை திருச்சி வழியாக சபரிமலை வந்ததாகவும்.கூட்டத்தில் கடவுச்சீட்டு தொலைந்து விடும் என்பதால் திருச்சியில் உள்ள தமது நண்பர் வீட்டில் வைத்து உள்ள தாகக்கூறி உள்ளனர்