பயம்!


பயம்!
: எல்லாம் சிவமயம்
என்று சொல்லுவினம், ஆனால்
எனக்கு எல்லாம் பயமயம். காலம்
உன்னை காலால் உதைக்கும்
என்று காலம் ஆன பாரதி சொன்னவர்.
காலணி காலால் உதைத்தால் காலில்
அடிபடும் என்ற பயம் எனக்கு.
கவிதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு,
பீம(ன்)னிண்ட கதைக்கும், அனும
(ன்)னிண்ட கதைக்கும் பயம்,
உதைக்கும் பயம், சிதைக்கும் பயம்.
கதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த
கதவும் பயம், முழுசா மூடின கதவும்
பயம், பூட்டு போட்ட கதவென்றாலும்
பயம் எனக்கு,
காடு பயம் எனக்கு
நாடு பயம் எனக்கு
கூடு பயம் எனக்கு,
குளம் பயம் எனக்கு, குளத்துக்குள்
இருக்கும் நண்டு கண்டாலும் பயம்
எனக்கு, பூச்செண்டு கண்டாலும் பயம்
எனக்கு.
செண்டு க்குள்ளார இருக்கும்
வண்டு கண்டாலும் பயம் எனக்கு.
கடிக்கிற நாயும், பூனையும்,
பூனை திங்கிற எலியும் பயம் எனக்கு.
வெடிச்சு சிதறுற செல்லும் பயம்
எனக்கு, செல்லுகாக பதுங்குற
பங்கரும் பயம் எனக்கு,
பங்கருக்குள் இருக்கிற பாம்பும்
கடிக்குமோ என்ற பயம் எனக்கு.
சன கூட்டம் பயம் எனக்கு, தனிமை பயம்
எனக்கு, தொங்க பயம், தாவ பயம்.
இந்த காசு பயம், மாசு பயம்,
தூசு பயம். அழுக்கு பயம், குளிக்க
பயம், ஆடை பயம்,
ஆடையில்லை என்றாலும் பயம்.
இந்த இங்கிலீஸும் பயம் எனக்கு.
சீனோ போபியா, ஏரோ போபியா, ஷுபோபியா,
ஹீமோ போபியா, ஒரிட்டோ போபியா,
செப்ரோ போபியா, டாபோ போபியா,
சைக்ரோ போபியா, மைக்ரோ போபியா,
கிளாசோ போபியா என பல போபியோக்கள்
ஆங்கிலத்தில் உண்டு என
சொல்லுவினம். இந்த
எல்லா போபியாக்களும்
உனக்கு உண்டடா கடவுள்தான்
உன்னை காப்பாற்ற வேண்டும் என
சொல்லி டாக்டர் பஞ்சபூதம்
சாமி கிட்ட அனுப்பினார்.
அங்கே போனால் செபிக்க பயம், சபிக்க
பயம், எடுக்க பயம், கொடுக்க பயம்,
சகிக்க பயம், சுகிக்க பயம்.
எதையும் உயரத்தில்
வச்சி அடுக்கபயம், யாரையும்
கோவிச்சி அடிக்க பயம்.
அண்டை மனுசரை அணுக பயம், அணுகிய
மனுசரை இழக்க பயம்.
உறவு பயம்,
துறவு பயம்,
இரவு பயம்,
விடியும் பயம். புதியம் பார்க்க
ஏனோ பயம், மதியம்
தூங்கி எழுந்தாலும் பயம்.
சோக பயம்,
வேக பயம்,
ரோக பயம்,
நோக பயம்,
போக பயம், வாரதும் பயம் எனக்கு.
வாழ பயம், சாகவும் பயம் !